தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணன் இன்று ஓய்வு பெறுகிறார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நீதிபதி கர்ணன் தலைமறைவு ஆனதை அடுத்து அவரை தேடும் பணியில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன் இன்று ஓய்வு பெறுகிறார். ஒரு நீதிபதி ஓய்வு பெறும்போது தலைமறைவாக உள்ளார் என்பது இதுவரை இந்திய வரலாற்றில் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009, மார்ச் 19ஆம் தேதி நீதிபதியாக பதவியேற்ற கர்ணனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று ஓய்வு பெறும் அவர் எந்த அரசு மரியாதையும் இல்லாமல், தலைமறைவு நீதிபதி என்ற பெயருடன் செல்லும் நிலை உருவாகியுள்ளதை துரதிர்ஷ்டமானது என்று சக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தால் கிடைக்கும் வழியனுப்பு விழா மரியாதையும் இவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.