ஒருநாள் முதல்வர் போல, ஒருநாள் பிரதமர்: 5வயது கனடா சிறுமிக்கு அதிர்ஷ்டம்

ஒருநாள் முதல்வர் போல, ஒருநாள் பிரதமர்: 5வயது கனடா சிறுமிக்கு அதிர்ஷ்டம்

ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒருநாள் முதல்வராக அர்ஜூன் இருப்பது போன்று ஒரு காட்சி வரும். இந்த காட்சி கனடாவில் உண்மையாகியுள்ளது. ஆம், 5வயது சிறுமி ஒருவர் ஒருநாள் பிரதமராக இருந்துள்ளார்.

கனடாவில் உள்ள சிபிசி கிட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் அந்நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒரு நாள் கனடாவின் பிரதமராக இருக்கலாம். இதற்கு பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் 5 வயது சிறுமி பெல்லா தாம்சன் என்பவர் வெற்றி பெற்று ஒருநள் கனடாவின் பிரதமராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தனது பெற்றோர்களுடன் பிரதமர் அலுவலகம் வந்த அந்த சிறுமி ஒருநாள் பிரதமராக செயல்பட்டார். அவரும் அவரது குடும்பத்தினர்களும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply