ஒற்றைப் புகைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம்

நம் கற்பனைக்கெல்லாம் எட்டாத,சிக்காத ஒரு மிகப் பெரும் பிரம்மாண்டம் இந்த படத்தில் இருக்கிறது. இதில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியுமே ஒரு கேலக்ஸி தான்.

கேலக்ஸி என்றால் நட்சத்திர கூட்டம் என்று வைத்துக் கொள்ளலாம்.நாம் வசிக்கும் இந்த பூமி,சூரிய குடும்பம் எனும் சோலார் சிஸ்டத்தில் ஒரு மிகச் சிறிய புள்ளி.அந்த சூரிய குடும்பம் மில்க்கிவே கேலக்ஸி எனும் பால்வீதி மண்டலத்தில் மிக மிக மிக சிறிய புள்ளி.அந்த மில்க்கிவே கேலக்ஸி இந்தப் படத்தில் ஏதோ ஒரு மூலையில்,அது இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு ஒரு மிகச் சிறிய புள்ளியாக இருக்கிறது…..எனில் இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ளுங்கள்…..

இந்த படத்தை எடுத்த JWST-James Webb Space Telescope கேமராவிற்கு,இந்தப் படத்தில் இருக்கும் ஒளி வந்தடைய 4.6 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.

அதாவது 4.6 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன் இந்த யூனிவர்ஸ் எப்படி இருந்ததோ,அதைத் தான்,அப்போது தோன்றிய ஒளியைத் தான் இந்த JWST கேமரா இப்போது படம் எடுத்திருக்கிறது என்கிறார்கள்.ஒரு பில்லியன் என்பது 100 கோடி.

ஒளி ஒரு நொடியில் பயணிக்கும் தூரம் கிட்டத்தட்ட 3 லட்சம் கிமீ….எனில் ஒரு நிமிடத்தில்,ஒரு மணி நேரத்தில்,ஒரு நாளில்,ஒரு மாதத்தில்,ஒரு வருடத்தில்,நூறு வருடத்தில்,லட்சம் வருடத்தில்,கோடி வருடத்தில்…..நூறு கோடி வருடத்தில்….4.6 பில்லியன் வருடத்தில்….கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்…..

அந்த ஒளியைத் தான் இந்தப் படத்தில் நாம் பார்க்கிறோம்…!!!!!!!