திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா மீண்டும் ரீ எண்ட்ரி ஆன திரைப்படம் ’36 வயதினிலே’. இந்த திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திவாகர் தன்னுடைய டுவிட்ட இணையதளத்தில் இந்த படத்தில் பணிபுரிந்த போது நடைபெற்ற நினைவுகள் மற்றும் படத்தை முழுதாக பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியுள்ளார். இவர் மேலும் கூறியபோது, ‘வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட திரைப்படம் 36 வயதினிலே’ என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு 36 வயதினிலே படத்தில் உணர்ச்சிமயமான காட்சிகள் இருந்தததாகவும், இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களையும் அழவைக்கும் என்று கூறியுள்ளார்.
ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மலையாளத்தில் இந்த படத்தின் ஒரிஜினல் படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘வாடி ராசாத்தி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளது.