ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு. அன்பழகன் மனு தள்ளுபடி

anbalaganமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை மனு விடுத்த திமுக பொதுச் செயலர் க.அன்பழகனின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து நே|ற்று உத்தரவிட்டது.

பவானிசிங்கின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என திமுக சார்பில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.குமார் மற்றும் பி. வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள்  சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பவானிசிங், வழக்கின் கடைசி வரை ஆஜராகி வாதிடலாம் என்றும், பவானி சிங் அரசு வழக்கறிஞராகத் தொடர்வதற்கு கர்நாடக அரசின் மறு உத்தரவு தேவையில்லை என்றும் உத்தரவிட்டனர்.

 எனவே பவானி சிங்கை நீக்கக் கோரும் க.அன்பழகன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply