இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயமானது. அம்மாநிலத்தில் கவர்னராக நரசிம்மன் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
ஆந்திரபிரதேச மாநிலத்தை தெலுங்கானா, சீமாந்திரா என இரண்டாக கடந்த மத்திய அரசு பிரித்தது. இரண்டு மாநிலங்களிலும் தனித்தனியாக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து இன்று மாநிலத்தின் முதல் ஆளுனராக நரசிம்மன் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானாவில் நடைமுறையில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆளுனர் பதவியேற்றதை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் இன்று காலை 8.15 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுனர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.