சோனியாகாந்திக்கு 24 மணி நேரம் கெடு விதித்த ராகுல் காந்தி. திடுக்கிடும் தகவல்

natwar singh new bookகாங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நட்வர்சிங் தனது அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறுவதை ஒட்டி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த புத்தகத்தில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி குறித்து இதுவரை வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக குறிப்பிட்ட நட்வர்சிங், சோனியா காந்திக்கு அவரது மகன் ராகுல்காந்தி 24 மணி நேரம் கெடு விதித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபோது, பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என சோனியா காந்தியை தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் என நட்வர் சிங் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தனது தாய் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்றால் தந்தை ராஜீவ் காந்தியைப் போன்று, அவரும் கொல்லப்படலாம் என ராகுல் காந்தி பயந்ததால் அவரை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தடுத்ததாகவும், முடிவை அறிவிக்க  ராகுல்காந்தி சோனியாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சோனியா காந்தி அவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவை பிரதமராக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் உடல்நலக்குறைவால் மறுத்துவிட்டதால் மன்மோகன்சிங் பிரதமர் பதவியை ஏற்றதாகவும் அந்த புத்தகத்தில் நட்வர்சிங் கூறியுள்ளார்.

Leave a Reply