சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பிரபலங்களின் போலி அக்கவுண்ட்டுகள் பெருகி வருவதாக தற்போது அதிகளவில் புகார் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் இந்த புகாரில் சிக்கியவர் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் பெயரில் போலியான ஒரு டுவிட்டர் அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டு அதில் அவர் தெரிவிப்பதை போல சில கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக அவருடைய உதவியாளர்கள், அவரது பார்வைக்கு செய்தி அனுப்பினர். இந்த தகவல் வந்ததும், டுவிட்டரில் நீண்ட அனுபவம் பெற்ற குஷ்புவிடம் கே.எஸ்.ரவிகுமார் டெலிபோனில் ஆலோசனை செய்தார். குஷ்புவும் அவர் கூறிய https://twitter.com/DirKSRaviKumar என்ற டுவிட்டர் கணக்கை பார்த்துவிட்டு அது போலியானது என்றும், அவரது பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் கணக்கை துவக்கியிருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர்களிடம் புகார் அளிக்க கே.எஸ்.ரவிகுமாருக்கு குஷ்பு ஆலோசனை வழங்கியுள்ளார். போலி டுவிட்டர் அக்கவுண்ட்டை கண்டுபிடிக்க உதவிய குஷ்புவுக்கு இயக்குனர் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.