கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜீத்-சமந்தா?

ajithஅஜீத் நடிக்கும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கிவிட்டன. அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

சுசீந்திரன் இயக்கத்தில் அஜீத் அடுத்ததாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் கூறிய கதை ஒன்று அஜீத்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், விறுவிறுப்பான அவர் கூறிய ஆக்சன் படத்தில்தான் அஜீத் அடுத்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன. கே.வி.ஆனந்த் இந்த கதையை ரஜினிக்காக உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தயாரிக்க ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்ற நிலையில் அஜீத் பட வாய்ப்பும் நெருங்கி வந்துள்ளதால் அவர் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply