வெங்கடேசப்பெருமாளின் அபிஷேகத்திற்காக ஆகாச கங்கையில் இருந்து நாள்தோறும் மூன்று குடம் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. காலை, மாலை, இரவு பூஜையின்போது இத்தீர்த்தம் பயன்படுத்தப்படும். பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் தீர்த்தம் யானைமீது வைத்துக் கொண்டுவரப்படும். மற்றநாட்களில் கோயில் ஊழியர்கள் கொண்டு வருவர். மூலவர் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். போக சீனிவாசப்பெருமாள் என்னும் சிறிய விக்ரஹத்திற்கே முழுமையான அபிஷேகம் செய்வர். வாசனைத்தைலம், திருமஞ்சனப்பொடி, பசும்பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்த பின், அலங்காரம் நடக்கும். அதன்பின், கண்ணாடியில் பெருமாளுக்கு முகம் காட்டி, அவர் முன் குடை பிடித்து, சாமரம் வீசுவர். இதன்பின் தீபாராதனை செய்யப்படும்.