ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய திரையரங்கில் ‘கபாலி’

ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய திரையரங்கில் ‘கபாலி’
kabali in paris
ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமை ‘ரெக்ஸ் சினிமா’ என்ற தியேட்டருக்கு உள்ளது. இந்த திரையரங்கம் ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வசதியை கொண்டது. ஹாலிவுட் படங்கள் மற்றும் பிரெஞ்ச் படங்கள் மட்டுமே இந்த திரையரங்கில் இதுவரை திரையிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த திரையரங்கில் ரிலீஸ் ஆகும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ மேலும் சுமார் 50 அடி உயரத்தில் இந்த திரையரங்கின் முன் பிரமாண்டமான ரஜினியின் கட் அவுட் ஒன்று தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரையரங்கின் ஸ்கிரின் பரப்பளவு 252 சதுர மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலி, ஒளி அமைப்புகள் மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன்  இந்த திரையரங்கில் அமைந்துள்ளது.

Leave a Reply