சென்சாருக்கு முன்பே ரூ.62 கோடி சம்பாதித்துவிட்ட ‘கபாலி’

சென்சாருக்கு முன்பே ரூ.62 கோடி சம்பாதித்துவிட்ட ‘கபாலி’
kabali
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 என்றும் பாடல்கள் வெளியீடு தேதி ஜூன் 12 என்றும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கர்நாடக உரிமை ரூ.10 கோடிக்கு ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளார். அதேபோல் இந்த படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா உரிமை ரூ.8.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு மாநிலங்களின் ரிலீஸ் உரிமையின் வியாபாரம் முடிந்துள்ளது. ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ‘ஷன்முகா பிலிம்ஸ்’ ப்ரவீன் மற்றும் செளத்ரி ரூ.32 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சென்சாருக்கு முன்பே இந்த படம் ரூ.50 கோடியை சம்பாதித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.82 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply