இது ஜனநாயகமமா? போர்க்களமா? கபிலன் வைரமுத்து கேள்வி
நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத மனவேதனையில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அரியலூர் அனிதா தனது உயிரை மாய்த்து கொண்ட நிலையில் தமிழகமே தற்போது கடும் உணர்ச்சி பெருக்கில் உள்ளது.
இந்த நிலையில் அனிதாவின் மரணம் குறித்து பல கோலிவுட் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை ஆத்திரத்துடன் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கவிஞர் கபிலன் வைரமுத்து தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது ‘அடிப்படை உரிமைகளைக் கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெறவேண்டும் என்ற சூழலுக்கு பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்’ என்று கூறியுள்ளார்.
இதைவிட நாகரீகமாக அரசுக்கு கண்டனம் தெரிவிக்க முடியாது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது.