கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு: நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதன் பலனாக மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும் என பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் 4.1 சதவீதமாக நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் இலக்கையும் எட்ட முடியும் என அரவிந்த் விர்மானி நம்பிக்கை தெரிவித்தார்.
எனினும் இந்த இலக்கை எட்ட மானியங்களின் அளவை குறைப்பதும் அவசியம் என அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் கூறினார். இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலைச் சரிவு சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை மத்திய அரசு லிட்டருக்கு ஒரு ரூபாய் 50 காசு உயர்த்தியுள்ளது.
இதனால் அரசுக்கு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக அரசின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.