மலையில் உற்பத்திஆகும் நதி காடு,மேடு என பயணித்து இறுதியில், கடலில் சங்கமிக்கிறது. அதுபோல, பிறந்தது முதல் பல இன்பதுன்பங்களை அனுபவித்து கடவுள் திருவடியாகிய கடலை அடைகிறான் மனிதன். இதன் அடையாளமாக அஸ்தியைக் கடலில் கரைக்கிறோம். பிறவிகளைக் கடந்து இறைவன் என்னும் மகாசமுத்திரத்தில் ஐக்கியமாகுதல் என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் இவ்வாறு செய்கிறார்கள்.