சிவலிங்கா, கடம்பன், பவர்பாண்டி ஓப்பனிங் வசூல் நிலவரம்
கடந்த வெள்ளியன்று வெளியான சிவலிங்கா, கடம்பன், பவர்பாண்டி ஆகிய மூன்று படங்களுமே நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றிருந்தாலும் இந்த ரேஸில் முதலில் முந்தியுள்ளது ராகவா லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படம்தான். இந்த படம் சென்னையில் ஓப்பனிங் வசூலாக ரூ.89,13,210 வசூலாகியுள்ளது.
இந்த படத்தை அடுத்து ஆர்யாவின் ‘கடம்பன்’ திரைப்படம் சென்னையில் ரூ.48,54,790 வசூலாகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ரசிகர்களிடமும், ஊடகங்களிலும் நல்ல பாசிட்டிவ் எனர்ஜியான விமர்சனத்தை பெற்றபோதிலும் இந்த படம் சென்னையில் கடந்த வாரம் ரூ.46,29,820 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ திரைப்படம் சென்னையில் ரூ.50,87,450 வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.