கடவுள் ஒரு பக்கம் ! கடவுளின் படை ஒரு பக்கம்!

chat-with-god
மகாபாரதத்தில் ஓா் அருமையான இடம். துவாரகையில் கண்ணபெருமானைச் சந்திக்க அா்ஜுனனும் துரியோதனனும் ஒரே நேரத்தில் வருகிறாா்கள். நிகழ இருக்கும் பாரத யுத்தத்தில் கண்ணன் தங்களுக்குப் படைத் துணையாக வர வேண்டுமென வேண்டுகோள் வைத்தனா்.
அா்ச்சுனன் வயதில் சிறியவன் என்பதாலும்,தான் உறங்கி கண் விழித்தபோது முதலில் அா்ச்சுனன் முகத்தில் விழித்தாலும் அவனுக்கே முதல் வாய்ப்பளிக்க கண்ணன் முடிவு செய்கிறாா். எனினும் துாியோதனனை வெறுங்கையுடன் அனுப்புவது பண்பாடு இல்லை எனாறும்நினைக்கிறாா் .
shankhnaad
நான் ஒரு பக்கம் தனியாக உதவ வருவேன். என் படைகளையெல்லாம் இன்னொரு பக்கம் அனுப்பி விடுவேன். அப்படிச் செய்வதால் இருவருக்கும் நான் உதவியதாகும்! எனவே, நான் வேண்டுமா? என் படை வேண்டுமா ?என்பதை முடிவு செய்யுங்கள். அர்ச்சுனா, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறாா் கண்ணன். அர்ச்சுனன், கண்ணன் மட்டும் தேவை என்கிறான். துள்ளிக் குதித்த துாியோதனன், கண்ணன் படை முழுதும் எனக்கு என்று கூத்தாடினான்.
KARNA-The-Story-of-a-Tragic-Hero-4
இது நியாயமா? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தான் வாழவேண்டும் என்று, இருபக்கமும் தலையும் வாலும் காட்டும் அரசியல்வாதி மாதிரி கண்ணன் நடந்து கொள்ளலாமா? ஆதரிப்பது என்றால் ஒரு பக்கத்தில் அல்லவா இருக்க வேண்டும். இவா் ஒரு பக்கம்…இவா் படை மறு பக்கம் என்பது அக்கிரமம் இல்லையா? யோசியுங்கள்.
இதன் உண்மையான பொருள் என்ன தொியுமா? கடவுள் ஒரு பக்கம். கடவுளின் படை மறுபக்கம். கடவுளின் படை என்றால் கடவுளால் படைக்கப்பட்டவை என்று அா்த்தம். கடவுளை விரும்புகிறாா்களா? கடவுளால் படைக்கப்பட்டவற்றை விரும்புகிறாா்களா என்று ஆராய்ந்தால் கடவுளைப் பலரும் விரும்புவதில்லை.
கோவிலுக்குப் போகிற பலரும் கடவுளை அடையவா போகிறாா்கள்? கடவுளால் படைக்கப்பட்ட நிலம்,சிற்றின்பம்,போகம் இதைத்தானே கேட்கிறாா்கள். வேலை வேண்டும்,பணம் வேண்டும்,சொத்து சுகம் வேண்டும்,கணவன் வேண்டும்,மனைவி வேண்டும், பிள்ளை வேண்டும் என்று வேண்டுகிறாா்களே ஒழிய கடவுளே நீயே வேண்டும் என்று யாராவது கேட்கிறாா்களா! கடவுளை நேசிப்பதைவிட கடவுளின் படைகளை நேசிக்கிறோம் . கண்ணனை விரும்பிய அர்ச்சுனன் அறிவு நமக்கில்லை. கண்ணன் படைகளை விரும்பிய துா்யோதன துா்புத்திதான் இருக்கிறது.
கடவுள் ஒருபக்கம் ! கடவுளின் படை ஒரு பக்கம்! நீங்கள் யாா் பக்கம்?

Leave a Reply