முடி மனிதனுக்கு கிரீடம் போன்றது. அது அழகின் அடையாளம். தன் அழகும் கூட இறைவனுக்கே அர்ப்பணம் என்ற உயர்ந்த தத்துவமே முடி காணிக்கை. அழகு குறைவதால் நான் என்ற அகந்தை எண்ணம் மனிதனை விட்டு நீங்கும். இதனால் தான் துறவிகள் எப்போதும் மொட்டைத் தலையுடன் இருக்கிறார்கள்.