விஜய்சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ படத்துக்கு வரிவிலக்கு
விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ மற்றும்’ சேதுபதி’ ஆகிய இரண்டு படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதை அடுத்து ஹாட்ரிக் வெற்றிப்படம் என்று எதிர்பார்க்கப்படும் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு ‘யூ’ சர்டிபிகேட் பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையும் கிடைத்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இந்த படம் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்திருந்ததால், இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரக்கனி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘சூது கவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் My Dear Desperado என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.