துப்பாக்கி, ஜில்லா போன்ற தமிழ் படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது ராம்சரண் தேஜாவுடன் Govindudu Andari Vaadele என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கும் சமந்தாவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காஜல் அகர்வால் நேற்று டுவிட்டரில் பதிவு செய்த ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பகுதியில் காஜல் அகர்வாலின் உருவப்படத்தை எரித்தும், அவருடைய போஸ்டரை செருப்பு மற்றும் சாணியால் அடித்தும் தெலுங்கானா மக்கள் தங்கள் எதிர்ப்பை காஜல் அகர்வாலுக்கு காட்டி வருகின்றனர். இதனால் காஜல் அகர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நேற்று அவர் தனது டுவிட்டரில் அரசியல் கட்சிகள் பந்த் செய்ய வேண்டாம் என்றும், பந்த் நடத்துவதால் பொதுமக்களுக்கு பெருமளவு கஷ்டத்தை கொடுப்பதோடு அரசுக்கு பலத்த பொருள் நஷ்டத்தை கொடுக்கின்றது என்று கூறியுள்ளார். தெலுங்கானாவில் மத்தியில் ஆளும் மோடி அரசை எதிர்த்து நேற்று பந்த் நடத்திய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை காஜல் அகர்வாலின் இந்த டுவிட் கோபத்தை கிளப்பியுள்ளது. காஜல் அகர்வால் பொதுவாக கூறியிருந்தாலும் அவர் தெலுங்கானா மக்களை குறிவைத்தே கூறியதாக நினைத்து தெலுங்கானா மக்கள் அவருக்கு கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால் தனது கருத்து தனிப்பட்ட நபரையோ அல்லது கட்சியையோ குறிப்பிடுவது அல்ல என்றும், பொதுவான கருத்துதான் என்றும் கூறியுள்ளார்.