அஜித் அன்பானவர், விஜய் அசராதவர், சூர்யா பிரமாதமானவர்: காஜல்

அஜித் அன்பானவர், விஜய் அசராதவர், சூர்யா பிரமாதமானவர்: காஜல்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால் தற்போது அஜித்தின் விவேகம் மற்றும் விஜய்யின் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ‘மாற்றான்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய், சூர்யா குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித்: அன்பு, மரியாதையுடன் செட்டில் அனைவரையும் சமமாக நடத்துபவர் அஜித். யாருக்கும் அட்வைஸ் செய்ய மாட்டார். ஆனால் அவரை சும்மா கவனித்தாலே போதும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் அவருடைய பிரியாணி எல்லோருக்கும் ஸ்பெஷல். எனக்கும் செய்து கொடுத்தார். சான்ஸே இல்லை அவ்வளவு டேஸ்ட்

விஜய்: நல்ல கடின உழைப்பாளி, செட்டில் அமைதியாக இருந்தாலும் கேமிரா ரோல் ஆக ஆரம்பித்தவுடன் நடிப்பில் அனைவரையும் அசரடிப்பார். வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ள பக்குவத்தை அவரிடம் இருந்துதான் அனைவரும் கற்று கொள்ள வேண்டும்’

சூர்யா: ‘சூர்யா, பிரமாதமான நடிகர். நடிப்புல மாஸ்டர். ஒரு கேரக்டருக்காக அவ்வளவு மெனக்கெடுவார்’

இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply