சிவபெருமான் என்றழைக்கப்படும் ஈசன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும்போது தனது சக்தியின் ஒருபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;
அப்படி வெளிப்படுத்திய சக்திகள் இரண்டு!
ஒன்று: வீரபத்திரர்
இரண்டு:காலபைரவர்
இருவரில் இந்த உலகம்,உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் உயிர்கள்(பாக்டீரியா முதல் நீலத்திமிங்கலம் வரை),பிரபஞ்சம் என்று அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஈசன்,காலபைரவப் பெருமானிடம் ஒப்படைத்தார்;இந்த பிரபஞ்சத்தை நிர்வாகிக்க காலபைரவப் பெருமான்,எட்டுவித வடிவங்கள் எடுத்துள்ளார்;இவர்களே அஷ்ட பைரவர்கள்!
(மனிதர்களாகிய நம் ஒவ்வொருவராலும் எட்டுவிதமான செயல்கள் செய்ய முடியும்;ஒவ்வொரு செயலையும் நிர்வகிப்பது இந்த அஷ்ட பைரவப் பெருமான் களே!) இந்த அஷ்ட பைரவப் பெருமான் களும் தலா எட்டுவித வடிவங்கள் எடுத்து 64 பைரவர்களாக உருவெடுத்துள்ளனர்;
நாம் செய்யும் எட்டுவிதமான செயல்களைக் கொண்டு நம் ஒவ்வொருவராலும் 64 விதமான பாவச் செயல்கள் அல்லது புண்ணியச் செயல்களைச் செய்ய முடியும்;இந்த 64 விதமான பாவங்களுக்கு தண்டனையும்,64 விதமான புண்ணியச் செயல்களுக்கு வரங்களும் தரும் பணியை 64 பைரவப் பெருமான் கள் ஈசனின் சார்பாகச் செய்து வருகின்றனர்;
இந்த அஷ்ட பைரவர்களைவிடவும் மிக மிக மிக உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான்!
இவரே சூரியனின் பிராணதேவதை ஆவார்;
அஷ்டபைரவர்களும் நமது தமிழ்நாட்டில் இருந்து அருள்பாலிப்பது நம்மில் பலருக்குத் தெரியாது;இதுவே அட்டவீரட்டானங்கள் எனப்படுகின்றன;இந்த அட்டவீரட்டானங்களில் சிவலிங்கவடிவில் அஷ்டபைரவப் பெருமான் கள் ஆட்சி புரிந்து வருகின்றனர்;இவைகளை ஒரு தமிழ்வருடத்திற்குள் யார் ஒரு முறை சென்று வருகிறார்களோ,அவர்களது அனைத்து முற்பிறப்பு ரகசியங்களும் அடுத்த ஒராண்டுக்குள் அவர்களைத் தேடி வரும் என்பது பைரவ ரகசியம்;
1.திருக்கண்டியூர்(தஞ்சாவூர் டூ திருவையாறு சாலையில்)
2.திருக்கோவிலூர்
3.திருப்பரசலூர் என்ற திருபறியலூர்(செம்பொனார் கோவில் அருகில்)
4.வழுவூர்(மயிலாடுதுறை டூ திருவாரூர் சாலையில் 12 வது கி.மீ)
5.கொறுக்கை(மயிலாடுதுறை டூ மணல்மேடு செல்லும் சாலை)
6.திருவிற்குடி(திருவாரூர் டூ நாகை செல்லும் சாலையில்)
7.திருக்கடையூர் மற்றும் திருக்கடையூர் மயானம்
8.திருவதிகை(பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ)
காலபைரவப் பெருமான் பிறந்தது கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதியன்று!