அஞ்சலியை அடிமுட்டாளாக்கினாரா களஞ்சியம்? திடுக்கிடும் தகவல்

kalanjiyamகடந்த வாரம் இயக்குனர் களஞ்சியம் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும், தற்போது உயிருக்கு போராடி வருவதாகவும் தமிழகத்தில் பல இணையதள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் களஞ்சியத்திற்கு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளது என்றும், அவர் அஞ்சலியையும், சினிமா ரசிகர்களையும் முட்டாளாக்க படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவதாக நடிப்பதாகவும் தற்போது புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று தமிழ் செய்தி இணையதளங்கள் சிலவற்றில் இயக்குனர் களஞ்சியம் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவதாகவும், அவரது உயிரை காப்பாற்றுவதற்கு அஞ்சலி ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடிப்பதற்காக வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டும் என அவரது நண்பர்கள் கேட்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் திருச்சி மருத்துவமனையில் ஜெனரல் வார்டில் படுத்திருப்பது போன்று ஒரு புகைப்படம் இன்று சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் புலன் விசாரணை செய்தபோது, களஞ்சியத்திற்கு ஏற்பட்டது சிறிய வகை காயம் என்றும், கையிலும், முதுகுப்பகுதியில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், மற்றபடி அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் தெரிய வந்தது.

அஞ்சலியிடம் இருந்து பணத்தை திரும்ப பெற களஞ்சியமும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து நடத்தும் நாடகம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சலி பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாது என்று கூறியது அனைவரும் தெரிந்ததே…

Leave a Reply