பாஜக ஆதரவுடன் முதல்வராகும் காங்கிரஸ் தலைவர்

பாஜக ஆதரவுடன் முதல்வராகும் காங்கிரஸ் தலைவர்
arunachal
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் மத்தியிலும், மாநிலங்களிலும் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில், அருணாச்சலபிரதேச மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஒருவர் முதல்வராகியுள்ளார்.

60 உறுப்பினர்களை உடைய அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அம்மாநிலத்தில் முதல்வர் நபம் துகி நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து திடீரென 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் அரசு பெரும்பான்மையை இழந்ததால் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. கலிகோ புல் தனக்கு ஆதரவாக 31 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவும் இருப்பதாககூறி கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இவருடைய கோரிக்கையை கவர்னர் ஏற்றுக்கொண்டதால் இன்று காங்கிரஸ் அதிருப்தி தலைவர் கலிகோ புல் தலைமையில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது.

Leave a Reply