ரஜினிகாந்த் உடல்நலம் பெற கமல், பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

பொன்ராதாகிருஷ்ணன்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்றிட எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.

கமல்ஹாசன்: மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர்
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.