அமெரிக்க அதிபரின் அதிரடியால் பாதிப்புக்குள்ளான கமல்-விஜய்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தினந்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறார். முஸ்லீம் நாடுகளுக்கு எதிரான விசா நடவடிக்கை, H1-B விசா நடவடிக்கை ஆகியவை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் எப்போது என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரியாததால் கோலிவுட் திரையுலகினர் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த தயங்கி வருகின்றனர். அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருந்த ‘விஜய் 61’ படப்பிடிப்பை தற்போது அட்லி பிரிட்டனுக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை வேறு நாட்டில் நடத்த கமல் யோசித்து வருகிறாராம்
அதேபோல் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம், கவுதம் மேனன் – விக்ரம் படங்களும் அமெரிக்காவில் தொடர்ந்து படமாக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.