கமல் இயக்க பொறுப்பாளர் கைது. பொங்கி எழுந்த கமல்
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது டுவிட்டரில் பதிவு செய்து வரும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் அரசியல்வாதிகளை ஆத்திரமூட்டியுள்ளது. ஒருபக்கம் சுப்பிரமணியன் சுவாமி, கமல்ஹாசனை முட்டாள் என்று தூற்றி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு அரசியல் கட்சி புகார் கொடுத்துள்ளது.
இந்நிலையில் கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் சுதாகர் என்பவரும் அவருடன் வேறு சிலரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஆத்திரமாக அதே நேரத்தில் கண்ணியமாக சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
னி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது.
TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கை மாறாது
எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர். நிரந்தரம் நம்நாடு’
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு அவருடைய ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.