45 நிமிட ‘சபாஷ் நாயுடு’ தயார். டுவிட்டரில் கமல் தகவல்
உலக நாயகன் கமல்ஹாசன் தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில் அவர் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் சென்னை திரும்பியதில் இருந்து எடிட்டருடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் எடிட்டிங் பணியில் இதுவரை மூழ்கியிருந்ததாகவும், தற்போது இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளின் 42 நிமிட காட்சிகளும் ஸ்ருதிஹாசனின் மூன்று நிமிட பாடல் ஒன்றின் எடிட்டிங் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் ஆக மொத்தம் தற்போது 45 நிமிட படம் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தகவலை கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: 42+ minutes edited length in each language. + 1 song with Shruti completed. Looking good. Kundu and Naidu have a life of their own.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.