கமல் பெயரில் பொய்யான அறிக்கை விட்ட விஷமி யார்?

கமல் பெயரில் பொய்யான அறிக்கை விட்ட விஷமி யார்?

kamals-uthama-villain-underway13 வருடங்களாக வாழ்ந்து வந்த கமல்-கவுதமி பிரிவு குறித்த செய்தி நேற்று வெளியானபோது திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இந்த பிரிவு குறித்து கவுதமி தரப்பில் இருந்து நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் கமல் பெயரில் ஒரு அறிக்கை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கை குறித்து கமல் தற்போது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது பெயரில் போலியான அறிக்கை வெளியிட்ட மர்ம நபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply