கமல்ஹாசனின் கட்சிக்கொடி சுட்டக்கொடியா?

கமல்ஹாசனின் கட்சிக்கொடி சுட்டக்கொடியா?

கமல்ஹாசன் நேற்று புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். இந்த கொடிக்கு அவர் நீண்ட விளக்கமும் கொடுத்த நிலையில் தற்போது இந்த கொடி, ஏற்கனவே வெளிவந்த ஒரு அமைப்பின் கொடியை காப்பியடித்த கொடி என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்

கமலின் கட்சி கொடி, மும்பை தமிழர் பாசறையில் கொடியில் இருந்து எடுக்கப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அந்த அமைப்பின் கொடியும் ஆறு கைகளுடன், மையத்தில் ‘அ’ என்ற எழுத்துடன் உள்ளது. கமல்ஹாசனின் கட்சி கொடியில் ‘அ’வுக்கு பதிலாக ஸ்டார் உள்ளது. மற்றும் வண்ணத்திலும் சிறு மாற்றம் உள்ளது.

அவ்வை சண்முகி உள்பட பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட நிலையில் தற்போது கட்சியின் கொடியும் காப்பியா? என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply