வீடு திரும்பினார் கமல். ‘கபாலி’ படம் பார்ப்பது எப்போது?
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஆழ்வார்ப்பேட்டையில் தனது அலுவலகத்தில் கடந்த மாதம் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எலும்பு முறிவுக்காக அவருக்கு அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவலை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வீடு திரும்பிய கமல், சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளதாகவும், ஓய்வுக்கு பின்னர் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அவர் தொடங்கவுள்ளதாகவும் கூறுகின்றன. மேலும் கமல்ஹாசனுக்காக விரைவில் ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சியை ரஜினி ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பூரண குணமாகி வீடு திரும்பியுள்ள கமல்ஹாசனுக்கு அவரது நண்பர்களும், திரையுலகினர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.