டிஜிட்டல் மயமாகிறது கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்

டிஜிட்டல் மயமாகிறது கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் தற்போது டிஜிட்டல்மயமாகி வருவதாகவும், விரைவில் புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் கிராபிக்ஸ், மோஷன் கேப்ட்சர் கேமிராவில் ஒருசில காட்சிகள் மற்றும் அதிநவீன டெக்னாலஜியில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதை சரியாக புரியாததால் தோல்வி அடைந்தது. அன்றைய மதிப்பில் ரூ.20 கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட இந்த படம் இன்றைய இளையதலைமுறையினர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தற்போது இந்த படம் டிஜிட்டல்மயமாகி வருகிறது.

இவ்வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இன்றைய இளையதலைமுறையினர் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள் என்றும் தயாரிப்பாளர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply