கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த அதிமுக பிரமுகர்கள்

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த அதிமுக பிரமுகர்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளதாகவும் நேற்று தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்ததை அடுத்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க அரசியல் பிரமுகர்கள் அவருடைய கோபாலபுரம் வீட்டை நோக்கி செல்கின்றனர்.

கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில் நேற்றிரவு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் சிலர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தனர்.

மேலும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் நேற்று கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக தலைவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply