ஜெயலலிதாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. கமல்ஹாசன்

ஜெயலலிதாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஜல்லிக்கட்டு, ஜெயலலிதா மரணம், அரசியல் குழப்பம், நெடுவாசல் ஆகிய பிரச்சனைகள் பொதுமக்களை பரபரப்பில் இருக்க வைத்தன. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் உள்பட பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டரில் அதிரடியாக தெரிவித்து வந்தார்

இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. மேலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாமல் ஜெயலலிதா இருந்திருக்கிறார்

சாதியை எடுத்துவிடுவது தான் எனது கொள்கை, சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்

தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் வரை திராவிடம் என்ற சொல் ஒலித்து கொண்டே இருக்கும்

வாக்குகளுக்கு விலைபேசும் போது கேள்விகளை எழுப்ப முடியாது

எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும்

அரசியல் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்

நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன்

விஸ்வரூபம் படத்துக்கு வந்த பிரச்னைக்கு இஸ்லாமியர்கள் காரணமல்ல

சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் என்று அர்த்தமல்ல; அது என் கோபத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்

எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது; காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர்

மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்

இவ்வாறு கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறினார்.

Leave a Reply