ஒரே நாளில் சர்டிபிகேட் பெற்ற கமல்-விஜய்-ஐஸ்வர்யா.

kamalகமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, ஜெயராம், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், நாசர் உள்பட பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்துக்கு நேற்று சென்சார் அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ படமும், விஜய் ஆண்டனியின் ‘இந்தியா பாகிஸ்தான்’ படமும் சென்சார் செய்யப்பட்டு இரண்டு படங்களுக்கும் சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். ‘வை ராஜா வை’ திரைப்படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Leave a Reply