ரஜினிக்கு போட்டியாக ரசிகர்களை சந்திக்கும் கமல்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் அனனத்து மாவட்ட ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த சந்திப்பின் கடைசி தினத்தில்தான் அவர் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்தார். ரஜினி-ரசிகர்கள் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக வந்தது
இந்த நிலையில் நேற்று முதல் கமல்ஹாசன் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சி குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.
நேற்று ஈரோடு, சேலம், கடலூர் மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் வரு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கமல் தன்னுடைய அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.