வெற்றிக்கு பின்னரும் எதிர்ப்பை சந்திக்கும் கமல்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நேற்று வாக்களிக்க வந்த கமலும் ரஜினியும் மாறுபட்ட கருத்தை பதிவு செய்ததற்கு ரஜினிக்கு ஆதரவும், கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
நேற்று வாக்களிக்க வந்த ரஜினிகாந்த், ‘தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ என்று கூறினார். ஆனால் இதற்கு நேர்மாறாக ‘இந்திய நடிகர் சங்கம்’ என்ற பெயரை வைக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினார்.
கமலின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் வெளிப்படையாக, ரஜினிக்கு நன்றியும் கமலுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கமலுக்கு எதிராக பலர் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்துவிட்ட போதிலும் கமல்-ரஜினி கூறிய கருத்துக்களால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது.