மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

கமல் கட்சியின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவருகு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் தனது கட்சியின் முக்கிய நபர் ஒருவருக்கு கொரோனா என்பதை அறிந்து இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

என் மாவட்டச் செயலாளருக்கும், அவரின் இணைபிரியா சகோதரருக்கும்,

இது ஒரு நோய், நரகமல்ல! இதை வெல்வது உறுதி.

போலி அரசியல் பூசாரிகள், போக்கிடம் இல்லாமல் திரிவர். அவர் கூற்றுக்கு இரையாகாதீர்.

காலி இடம் நிரப்பவல்ல நாம்.

நாம் புத்துயிர்! புதிய உலகம்!

ஆதலால் நாளை நமதே.

உங்கள் நான்.

Leave a Reply