காந்திஜியை போல எனக்கும் இருவர் தோள் கொடுத்தனர். கமல்
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வந்த ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த ஒருசில நாட்களுக்கு முன் திடீரென கமல் தனது அலுவலகத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதனால் காலில் அவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதற்காக முதலில் ஒரு அறுவை சிகிச்சையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சையும் செய்துள்ள நிலையில் தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக கவுதமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கமல், தனது உடல்நிலை குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “‘ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்’ என்று கூறியுள்ளார். மகாத்மா காந்தி தனது முதுமை காலத்தில் இருவருடைய உதவியுடன் நடந்தார் என்பதைத்தான் கமல் இந்த டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் ‘சபாஷ்நாயுடு’ படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.