காக்கா உட்கார பனம்பழம் விழுந்து விட்டதா? கமலஹாசன் டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பதில்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கமலஹாசன் ஊரடங்கு உத்தரவு குறித்து கடுமையான டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். ஊரடங்கு உத்தரவால் சாமானியன் எப்படி சாப்பிட முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியதோடு பிரதமருக்கு இது குறித்து நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்
இதனை அடுத்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏழை எளியவர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களையும் இலவசமாக கொடுக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
கமல்ஹாசன் தனது டுவிட் மற்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் காரணமாகத்தான் இந்த அறிவிப்பு வெளிவந்தது உள்ளதாக தற்போது தனது டுவிட்டரில் நன்றி கூறி ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்
இதுகுறித்து நெட்டிசன்கள் காக்கா உட்கார பனம் பழம் விழுந்து விட்டது என விமர்சனம் செய்து வருகின்றனர்