கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்திற்காக சவுண்ட் எஞ்சினியராக பணிபுரிந்த ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
கிரேக் மேன் (Craig Mann) என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் சவுண்ட் எஞ்சினியர் ‘விப்லிஷ் (Whiplash) என்ற படத்திற்கு சிறப்பக சவுண்ட் எபெக்ட் செய்த வகைக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்ததும் கமல்ஹாசன் உள்பட உத்தம வில்லன் படக்குழுவினர் அனைவரும் கிரேம் மேனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ஊர்வசி, ஜெயராமன், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.