இந்த படத்தின் 30 நிமிடக்காட்சிகள் நீக்கப்பட்டு புதியதாக 20 நிமிடங்கள் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பார்த்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜானி, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை போன்ற எதார்த்தமான படங்களை இயக்கிய மகேந்திரன் இந்த படத்தின் காமராஜரின் அமைச்சர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.
புதிய வடிவில் உருவாகும் காமராஜ்’ படம் குறித்து இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியபோது, ‘இன்றைய இளைஞர்களுக்கு காமராஜரின் புகழை கொண்டுசெல்லும் விதமாக பல புதிய விஷயங்கள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கண்டிப்பாக இந்த படத்தை இளையதலைமுறையினர் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
காமராஜராக ரிச்சர்டு மதுரம் நடித்துள்ள இந்த படத்தில் வி.எஸ்.ராகவன், சாருஹாசன், விஜயன், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். விஜயகுமார் இந்த படத்தில் ஈ.வெ.ரா. பெரியார் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.