தேர்தலில் தோல்வி அடைந்த அதிபரை நாட்டை விட்டே துரத்திய மக்கள்
ஆப்பிரிக்க நாடான காம்பியா என்ற நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக
கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த யாகியா ஜம்மே சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் அவரை நாட்டை விட்டே துரத்தினர். அவர் தனது மனைவியுடன் நேற்று அண்டை நாடான கினியாவுக்கு சென்றார். மக்கள் புரட்சியால் ஒரு அதிபர் நாட்டை விட்டே துரத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அத்மா பாரோ காம்பியாவின் புதிய அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ளார். மக்கள் புரட்சி செய்தால் அதிபரும் அடுத்த நாட்டிற்கு சென்று குடியேற வேண்டிய நிலை வரும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டாக உலக நாடுகள் பார்க்கின்றன.