தேவையான பொருட்கள்:
கணவாய் மீன் – 10
இஞ்சி விழுது – 2 மேசைகரண்டி
பூண்டு விழுது – 2 மேசைகரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 15
தக்காளிப் பழம் – 1
புளி – 1 மேசைகரண்டி
எண்ணெய் – 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
சீரகம் – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொரிந்து வரும் போது, தக்காளியை போட்டு வதக்கவும்.
* புளியை அரைக் கோப்பை இளஞ்சூட்டு நீரில் கரைத்து பொரிந்து வரும் கலவையுடன் கலக்கவும், இப்போது ஊறவைத்து இருந்த கணவாய் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)
* 20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த் தன்மை வற்றிய பின்பு, சிறிது நேரம் அதில் உள்ள எண்ணெயில் பொரிய விடுங்கள். பொரிந்து வரும் போது சிறிதாக வெட்டி வைத்த கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.
* சுவையான கணவாய் மீன் பொரியல் ரெடி.
குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கணவாய் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம்.