தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை பிரதமரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி சோனியா காந்தியை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனிமொழி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, சோனியா காந்தி உடல்நலம் குறித்து டெலிபோனில் விசாரித்தார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், தமிழக கூட்டணி விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் இந்த சந்திப்பு நடந்துள்ளது என தெரிகிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ், திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.