2ஜி வழக்கு விசாரணை: கனிமொழி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

2ஜி வழக்கு விசாரணை: கனிமொழி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
kanimozhi
2ஜி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்யக்கோரிய கனிமொழி எம்.பி.யின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர்  ஆ.ராசா மற்றும் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், 2 ஜி வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி தத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கீழ்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் நிலையில் இருப்பதால், அதில் குறுக்கிட விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

English Summary: Kanimozhi plea dismissed by CBI judges at 2G scam case

Leave a Reply