பலத்த கெடுபிடிகளுக்கு இடையே இனிதாக முடிந்தது கண்ணகி திருவிழா.

kannagiஓவ்வொரு சித்திரை பெளர்ணமி அன்றும் தமிழ கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் முழு நிலவு விழா நடைபெறும் வழக்கம் உண்டு. இந்த வருடமும் இந்த விழா பெரும் கெடுபிடிகளுக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது.

இந்த விழாவின் போது மொட்டை போடக்கூடாது,  தண்ணீர் புட்டிககளை எடுத்துச் செல்லக்கூடாது, தனித் தனியாக பூஜைகள் செய்யக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்தில் இருந்து பளியங்குடி வழியாகவும், தேக்கடி வழியாகவும், பக்தர்கள் நடந்தும், ஜீப்பிலும் கண்ணகி கோவிலுக்கு சென்றனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஜீப் ஒருசில இடங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் நடந்து சென்றே கண்ணகியை வழிபட்டனர். தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா இனிதே நிறைவேறினாலும், சிதிலமடைந்த கண்ணகி கோவிலை நல்ல முறையில் புதுப்பிப்பது , தமிழகப் பகுதிகளிலிருந்து சென்று வர சாலை வசதி மற்றும் வாகன வசதி மற்றும் எவ்வித கெடுபிடிக ளுமின்றி கண்ணகியை தரிசிக்க வழிசெய்வது என எப்போதும்போல இந்த வருடமும் மக்களின் கோரிக்கைப் பட்டியலில் ஒன்றும் நிறைவேறவில்லை என்பது வேதனையான விஷயம் .

Leave a Reply