[carousel ids=”65081,65082,65083″]
நாகர்கோவில் : கன்னியகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் பத்து நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டம் நøபெற்றது. பத்தாம் நாள் விழாவில் தேவி திருவேணி சங்கமத்தில் ஆராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து இரவில் வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்துக்கு தேவி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பம் குளத்தில் வலம் வந்த போது பக்தர்கள் தேவியை குளத்தை சுற்றி நின்று தரிசனம் நடத்தினர். தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.