கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி. இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் கடைசி தினமான இன்று வெற்றி பெற 434 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணிக்கு இந்தியா நிர்ணயித்தது. நேற்று 96 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நியூசிலாந்து இன்று 236 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 197 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.