கான்பூர் டெஸ்ட்: வெற்றி பெறும் நிலையில் இந்தியா
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த 22ஆம் தேதி கான்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 97 ஓவர்களில் 318 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் 56 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னணியில் இருந்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தவுடன் டிக்ளேர் செய்தது.
இதனால் 433 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் வெற்றி பெற 341 ரன்கள் தேவை என்பதால் இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது. நாளைய கடைசி தினம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்தியா மிக எளிதில் வென்றுவிடும்.